சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பேரூராட்சி மன்ற தலைவர் அறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் மணிகண்டன் வரவேற்று பேசினார். அலுவலக பணியாளர் கலைச்செல்வி தீர்மான நகலை வாசித்தார். 14 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது