தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும் இந்த காலங்களில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீராடுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது இந்த ஆண்டு குற்றால சீசன் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து குற்றால அருவிகளின் நீர்வரத்து குறைந்தது சுற்றுலா பயணியில் வருகை புரிந்து காணப்படுகிறது