திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் அமைந்துள்ள பெரியார் வளாகத்தில் தனித்து வாழும் பெண்கள் செயல்பாட்டு அரன் மாவட்ட கூட்ட விழா நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் ஜேபி ஆனந்தி தலைமையில் பீட்ஸ் தொண்டு நிறுவன செயலாளர் ராதா வரவேற்புரையாற்றினார். மேலும் மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தனித்து வாழும் பெண்கள் சமூகத்தால் ஏற்படும் இன்னல்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு கையாள வேண்டும், மேலும் தனித்து வாழும் பெண்களுக்கு அரசு என்ன என்ன திட்டங்கள் வைத்துள்ளது அதனை எவ்வாறு பயன்பெறலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..