தென்கடல் மற்றும் வடகடல் சங்கமிக்கும் இடமான அரிச்சல் முனை மூன்றாம் தீடை மற்றும் நான்காம் தீடை பகுதியி மிகவும் ஆபத்தானது மீனவர்களின் உயிருக்கும் படகிற்கும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. இதனால் மூன்றாம் தீடை மற்றும் நான்காம் தீடை கடற்பகுதியில் எந்தப் படகுகளும் கடந்து செல்ல அனுமதி இல்லை, மேலும், இதில் நான்காம் தீடை தடை செய்யப்பட்ட பகுதி ஆகும். எனவே இவ்வழியாக உள்ளூர் மீனவர்கள் வெளியூர் படகுகளை கடத்திவிட துணையாக இருந்தால் அவர்கள் மீதும் கடத்தி விட பயன்படுத்தும் படகின் மீதும் காவல்துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்