உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கொணலவாடி அருள்மிகு அய்யனார் கருமியம்மன் கோவில் மகமேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.இதில் மரம் மற்றும் மூங்கில்களை கொண்டு சுமார் 60 அடி உயரரத்தில் அமைக்கப்பட்ட மகமேர் தேரில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருமியம்மன் வைக்கப்பட்டு அதனை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் தோளில் சுமந்து தூக்கி க்கொண்டு தேரோட்டத்தை நடத்தினர்