திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொடைக்கானல் செண்பகனூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயாயிரம் வெவ்வேறு வகையான வனவிலங்குகள், இருநூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள், உள்ளூர் பறவைகள், பல்வேறு வகையான பாம்பு வகைகள் மற்றும் பழங்கால நாணயங்களை பார்வையிட்டார்.