திண்டுக்கல் மேற்கு வட்ட துணை வட்டாட்சியர் மரியசூசை முத்தனம் பட்டியை அடுத்த பி எஸ் என் ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் வந்த போது கல்லூரி முன்பு சாலையை கடக்க முயன்றவர் மீது சரக்கு வாகனம் மோதியது இந்த விபத்தில் துணை வட்டாட்சியர் மரிய சூசை படுகாயம் அடைந்தார் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்