சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள கே.புதுப்பட்டியில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து புதிய நியாய விலைக் கடை கட்டிடம் கட்டுவதற்காக பூமிபூஜை விழா நடைபெற்றது. இந்த பூமிபூஜை விழாவிற்கு முன்னாள் சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பொன்.மணிபாஸ்கரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் கே.புதுப்பட்டி ஊர் அம்பலம் திருப்பதி, எஸ்.புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் இராஜமாணிக்கம், சாமியாடி சாத்தப்பன், உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்