திருச்சி மாவட்டம் பச்சமலை வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பை பகுதியில் வசிக்கும் செல்வகுமார் என்பவர் மகன் பரத். இவர் தேசிய சட்டக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி பழங்குடியினர் மாணவர்களின் முதல் மாணவனாக வெற்றி பெற்றார். அவரை தமிழக முதல்வர் மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு உள்பட ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்த நிலையில் படிப்பு செலவிற்கு பணம் இல்லை என முதல்வருக்கு மாணவன் மற்றும் அவரது தந்தை கோரிக்கை வைக்கின்றனர்.