தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாடு செல்வ விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள் கோயில் பல லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை கடங்கள் புறப்பட்டு விமானத்தை அடைந்து கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.