சாணார்பட்டி அருகே உள்ள மடூர் களத்துப்பட்டி மஞ்சக்கம்மாள், சலகெருது தத்தன் சுவாமி கோவில் திருவிழா 55 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் காப்பு கட்டி விரதத்துடன் தொடங்கியது. திருவிழாவில் நாயக்கர் மந்தைக்கு கட்டுப்பட்ட கிராமங்களை சேர்ந்த நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வாக மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான அதில் அந்த சமுதாய மக்கள் சடங்குகள் செய்து, 50 க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டது