ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு +1 படிக்கும் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் செந்தில்நாதன் காவியல் உடையுடன் பல்வேறு கோவிலில் சாமியார் வேடத்தில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்செந்தூர் சென்ற போலீசார் செந்தில் நாதனை கைது செய்தனர்.