திருவள்ளூர் மாவட்டம் பூச்சி அத்திப்பேடு பகுதியில் இருந்து பெண்கள் குழுவினர் மீஞ்சூர் பச்சையம்மன் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக ஆட்டோ ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்த போது வழுதிகைமேடு சுங்கச்சாவடி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழுந்து இன்று மதியம் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த கர்ப்பிணிப்பெண் உட்பட 6பேர் சிராய்ப்பு காயமடைந்தனர்.