அரியலூர் மாவட்டம் இரும்பிலிகுறிச்சி கடைவீதி அருகே காவல்துறையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக காரில் கடத்தி வந்த உஞ்சினி கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள் மற்றும் கார் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.