தியாகி இமானுவேல் சேகரனார் பஞ்சாபில் இந்திய ராணுவத்தில் வேலை செய்து விட்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். 68 ஆவது நினைவு தினத்தையொட்டி நினைவிடத்திற்கு வந்த அவரது மகளான பிரபாராணி மற்றும் அவரது குடும்பத்தினர் முதலாவதாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.