சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1 மணி அளவில் தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் டவுணில் இருந்து சந்திப்பு நோக்கி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் டவுண் பகுதியை சேர்ந்த லோகேஷ், சந்தோஷ், சாதிக் ஆகிய 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் .மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.