அண்ணா நகர் திருமங்கலம் பகுதியில் உள்ள பி எம் ஸ்ரீ கேந்திர வித்யாலயா பள்ளியில் பழைய மேசைகள் நாற்காலிகள் ஆகியவைகளை வகுப்பறையில் வைத்துள்ளனர் அந்த அறையில் இன்று 7 அடி நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் வன காவலர் ஜெய் வினோத் என்பவர் விரைந்து வந்து பாம்பை லாவகமாக பிடித்து சென்றால் இதனால் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இடையே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.