தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட திருவெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்று திரண்டு செய்தியாளர்களை சந்தித்தனர் அப்பொழுது அவர்கள் தெரிவிக்கும் பொழுது அதிமுக நான்கு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் தங்களைப் போன்ற அதிமுக ஆதரவாளர்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் அனைவரும் ஒன்று திரண்டு ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்