நத்தம் ஏரியில் அனுமதியின்றி மண்கடலில் ஈடுபட்டு வருவதாக 100 தொலைபேசி எண்ணுக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது 3மாதத்திற்கு முன்பு போடப்பட்ட எக்ஸ்பிரியான பர்மிட் வைத்து மண் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கந்திலி போலீசார் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் டிப்பர் லாரி ஓட்டுனரான நத்தம் பகுதியைச் சார்ந்த விஜய் மற்றும் ஜேசிபி ஆபரேட்டர் முரளி ஆகியோரை கைது செய்தனர்.