திருப்பத்தூர் நகராட்சி பெரிய ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள கோழி இறைச்சி கடைகளின் இறைச்சிகள் மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாக தற்போது மாறி வருகிறது. இதனால் ஏரிக்கரை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த இறைச்சிகள் மற்றும் குப்பைகளால் ஏரியில் உள்ள நீரின் மாசு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலையில் உள்ளது என புகார் அளிக்கப்பட்டது.