ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழைய அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஜேசிபி எந்திரங்கள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் இடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பழைய ஆக்சிஜன் சிலிண்டர் குழாய் செல்லும் பகுதியில் சுவரில் வெடிப்பு காரணமாக அந்த சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் குழாய் உடைந்து அதிலிருந்து ஆக்சிஜன் பயங்கர சத்தத்துடன் வெளியேறியது. இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி வெளியில் வந்து சிகரெட் உள்ளிட்டவைக்காக யாரும் தீ பற்ற வைக்க வேண்டாம் என எச்சரித்தனர்.