உளுந்தூர்பேட்டை அமைச்சார் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரவர்மன் (வயது 13) தேர்வுக்காக பேப்பர் வாங்க வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். அப்போது அந்த கடைக்கு எதிரே ராஜா என்பவரின் ராட்வீலர் நாய் சிறுவனை கடித்து குதறியது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்.