போராடிவரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம். போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.