ஜே. புதுக்கோட்டையில் 300க்கும் மேற்பட்ட ராஜகம்பள இனத்தை சேர்ந்த மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர் திருவிழா நடத்துவதற்கு 13 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை தனது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளதாகவும் கடந்த 1922 ஆம் வருடம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே மதுரை ஜில்லா கலெக்டர் கோயில் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர் 1968ம் ஆண்டு 3 ஏக்கர் நிலத்தை ஊராட்சிக்கு, அதுவும் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு வழங்கலாம் என வழங்கிய நிலத்தில் அரசு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு