கொடைக்கானல் நகர் பகுதியில் வத்தலக்குண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பதிவு சான்றிதழ், அனுமதி சான்றின்றி இயக்கப்பட்ட சுற்றுலா வாகனங்கள் 2, மேக்சிகேப் வாகனம் 1 ஆகிய 3 வாகனங்களை பறிமுதல் செய்து கொடைக்கானல் போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து சீட் பெல்ட், இன்சூரன்ஸ், தகுதி சான்று இல்லாத ஏராளமான வாகனங்களை ஆய்வு செய்து ரூ. 1.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்