பூதப்பாண்டியை சேர்ந்தவர் ஹரி சுதன் இவர் புதிய மெடிக்கல் ஷாப் அமைக்க வடசேரி பகுதியில் உள்ள அரசு உதவி இயக்குனர் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்தார் ஆனால் இதற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று மருந்து ஆய்வாளர் கதிரவன் கேட்டுள்ளார் பணம் கொடுக்க விரும்பாத ஹரி சுதன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார் அவர்களின் அறிவுறுத்தலின்படி பணத்தை கொடுத்த போது கதிரவனை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்