திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர் குளம் பகுதியில் 205 திருநின்றவூர் முதல் ஆந்திரா ரேணிகுண்டா வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது,இதனால் தண்ணீர்குளம் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை தடுத்து உயர் மட்ட சாலை அமைப்பதால் அம்மக்கள் சென்று வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி இன்று காலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்,