தஞ்சாவூர் நகரில் நேற்று இரவு கனமழை பெய்தது. ஏராளமான பக்தர்கள் தஞ்சை பெரிய கோவில் உள்ளே மழையின் காரணமாக ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னொளியில் மழை பின்னணியில் தங்கமாய் ஜொலித்த தஞ்சாவூர் பெரிய கோயில் அனைவரும் வீடியோ எடுத்தனர். மழையின் காரணமாக கோயில் உள்ளே தேங்கி இருந்த தண்ணீரில் கண்ணாடி பிம்பமாய் பெரிய கோயில் கோபுரம் தெரிந்ததை கண்டு அனைவரும் ரசித்துப் பார்த்தனர்.