கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை தமிழ்நாடு முக்குலத்தோர் அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இலுப்பையூரணி கிராம மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் . அதைத் தொடர்ந்து கோரிக்கை மனுவை தாலுகா அலுவலகத்தில் வழங்கினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.