வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நேற்று இரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். இந்த தீ விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து அம்பலூர் போலீசார் இன்று காலை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.