ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பங்கேற்றனர் அப்பொழுது புதுப்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் 40 ஆண்டு காலம் மேலாக பகுதியில் வசித்து வருவதாகவும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என முறையிட்டனர்