இஸ்லாமியர்கள் முக்கிய பண்டிகை ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, காங்கேயம் சாலையிலுள்ள 50க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில் பிரியாணி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக காங்கேயம் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.