நாட்றம்பள்ளி, பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அவரது நண்பர் குமரேசன் ஆகிய இருவரும் திருப்பத்தூர் பகுதியில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி சென்றபோது அப்போது கட்டேரி அம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டு இருந்த பிக்கப் வாகனத்தின் பின் பக்கத்தில் மோதிய விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் காயம்பட்ட குமரேசனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.