கடலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வேன் மூலமாக இன்று இந்திலியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். போட்டி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது எம்.எஸ்.தக்கா தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது