திருவாடானை அருகே பாரதிநகரில் இருக்கும் கற்பக விநாயகருக்கு கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி காப்பு கட்டப்பட்டு பத்து நாள் திருவிழாவாக நடைபெற்றது ஒவ்வோர் நாளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றது.விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் கற்பகவிநாயகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது