பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருப்பத்தூர் மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள லலிதா திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட சார்பில் மாவட்ட செயலாளர் டிகே ராஜா தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் டி கே ராஜா கட்சியில் வருகின்ற தேர்தலுக்குள் திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்க வேண்டும், செப்டம்பர் 17ஆம் தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பேனர்கள் வைத்து நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.