சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கே.நெற்புகப்பட்டியில் உள்ள ஸ்ரீ நல்ல காட்டய்யனார் கோவிலில் ஜிர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, பல்வேறு பூஜைகள், தீபாராதனையுடன் முதல், இரண்டாம் கால பூஜைகள் நடந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை ஐந்தாம் கால பூஜைகள், வேதபாராயணம், கடஸ்தாபனம், மஹா பூர்ணாகுதியுடன் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னிலையில் மஹா அபிஷேகம், அன்னதானம் வழங்கப்பட்டது.