திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கோனூர், அம்மாப்பட்டி, கொத்தப்புளி, காமாட்சிபுரம், கரிசல்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கோனூர் ஊராட்சி, கீழத்திப்பம்பட்டி கிராமத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.