பரமக்குடியில் புனித அலங்கார அன்னை ஆலயம் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காக பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை ஆயர் ஆரோக்கியசாமி தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி உடன் கொடி ஏற்றம் தொடங்கியது தொடர்ந்து அன்னையின் திருவுருவ பவனி நடைபெற்றது. பின்னர் தினசரி காலை, மாலை வேலைகளில் சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது.