திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் விவசாய விளை நிலங்களுக்கு அருகே மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பா.விராலிப்பட்டி கிராம பகுதியில் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் விவசாய நிலங்கள் மற்றும் நீரோடை தடுப்பணை பகுதியில் கொட்டப்படுகின்றன.