விருதுநகர் சிவகாமிபுரம் 1வது தெருவில் ராஜேஷ் என்பவர் வீட்டில் பெரிய பாம்பு இருப்பதாக ராஜேஷ் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியுடன் வந்து பாம்பை பிடித்தனர் . பிடிபட்ட பாம்பு ஆறடி நீளம் உள்ள சாரை பாம்பு என்று தெரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பிடிபட்ட பாம்பை ஒரு பைக்குள் போட்டு கொண்டு போய் காட்டு பகுதியில் விட்டனர்