நாட்றம்பள்ளி பேருந்து நிலையம் அருகே SRDPS தொண்டு நிறுவனம் சார்பில் மதுப்பழக்கம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது எனவும் மது பழக்கத்தினால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.