உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விவேகானந்த கேந்திரம் சார்பாக உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என 2008 திருவிளக்கு பூஜை மூன்றாம் பிராகாரத்தில் நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர்.