சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தேவகோட்டை மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நாற்றங்கால் பண்ணைகளை ஆய்வு செய்தார்.கீழசெம்பொன்மாரியில் ரூ.4.91 இலட்சம் மதிப்பில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அமைந்த பண்ணையில் 10,000 மரக்கன்றுகள் பராமரிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு மானியத்தில் கருவிகள், கன்றுகள் வழங்கப்படுகின்றன. பயன்பெற ஆட்சியர் வலியுறுத்தினார். ஆய்வில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.