கும்மிடிபூண்டி அடுத்த சித்த ராஜா கண்டிகை பகுதியில் இன்று மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு வெளியே வந்த மாணவிகள் நான்கு பேர் அடுத்தடுத்து சுவாசிக்க முடியாமல் திணறிய நிலையில் அடுத்தடுத்து நான்கு பேரும் மயக்கமடைந்தனர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக மாணவிகள் மீட்கப்பட்டு கோட்டைக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,அரசுப் பள்ளியை சுற்றிலும் அதிக நச்சுத்தன்மை உடைய மாசுவை வெளியேற்றக் கூடிய தொழிற்சாலைகள் காரணம் எனக் கூறப்படுகிறது