ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. புதிய கிணறுகள் அமைப்பதால் ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனம் ஆகிவிடும் என்பதால் அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.