அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (எ) குறளரசன் என்பவர் திருப்பத்தூரில் எதோ ஒரு பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று நெருங்கி பழகியதில் 13 வயது சிறுமி கர்ப்பமாகியதன் காரணமாக அவ்வபொது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி 5மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசன் என்கிற குறளரசனை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்