பொள்ளாச்சி மத்திய அண்ணா பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன மேலும் கிராமப்புற பகுதிகளுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது இந்நிலையில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் பழுதடைந்த மேற்கூரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெயர்ந்து விழுந்தது அந்தப் பகுதியில் பொதுமக்கள் செல்லாதுவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது