திருப்பத்தூர் அடுத்த மலைகிராமமான நெல்லிவாசல்நாடு ஊராட்சிக்குட்பட்ட புலியூர் பகுதியில் பொதுமக்கள் தங்களுக்கு பேருந்துவசதி, சாலைவசதி வேண்டி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று புலியூர் பகுதியில் சாலைமறியல் செய்ய முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் அவர்களிடம் இன்று நண்பகல் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.