திண்டுக்கல் RM. காலனி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (75 ) மனைவி விஜயா (70) RM.காலனியில் வசித்து வரும் கணவன், மனைவி இருவரும் அண்ணாமலையார் பள்ளி அருகே உள்ள கொரியர் அலுவலகத்தில் கொரியர் அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் ஸ்கீம் ரோட்டில் வந்து கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். தனியார் பேருந்து விஜயாவின் தலை மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் கணவன் கண் முன்பாகவே மனைவி துடி துடித்து இறந்தார்.